வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுக்கத்தூர் அடுத்த மகமதுபுரம் பகுதியை சேர்ந்த பிரேம், தருமன், நாகச்செல்வன். 24 வயதான இந்த 3 இளைஞர்களும் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிவிட்டு மே 14ந்தேதி இரவு தங்களது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அணைக்கட்டு – ஒடுக்கத்தூர் சாலையில் செல்லும்போது கணவாய்மேடு என்கிற பகுதியின் ஏரிக்கரை அருகே மிதமிஞ்சிய வேகத்தில் தங்களது வாகனத்தை ஓட்டியுள்ளனர். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மூவர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பிரேம், தருமன் ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளனர். காயம்பட்டு உயிருக்கு போராடிய நாகசெல்வன் என்பவரை அவ்வழியாக செசன்ற பொதுமக்கள் மீட்டு உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் கொண்டு சென்று சேர்த்தனர். தற்போது வரை உயிருக்கு போராடி வருகிறார். மருத்துவர்கள் சிகிச்சியளித்து வருகின்றனர்.
இந்த சாலையில் வேலைக்கு சென்றுவிட்டு வரும் கூலி மக்களும், இளைஞர்களும் மது போதையில் தங்களது வாகனத்தில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த போலிஸ் முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள்.