Published on 26/05/2020 | Edited on 26/05/2020

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த பொது முடக்கமானது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மே 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் மருத்துவ நிபுணர் குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் சென்னைக்கு பொதுமுடக்கத்திலிருந்து தளர்வு அளிக்கக்கூடாது என அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.