Skip to main content

'விரைவு பேருந்து முன்பதிவு நிறுத்தம்...'-பொங்கலுக்கு பின் ஊர் திரும்புவதில் சிக்கல்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

'Express bus booking stop ...' - Problem returning home after Pongal!

 

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 2,731- ல் இருந்து 4,862 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் 4,824 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 38 பேர் என 4,862 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  சென்னையில் மேலும் 2,481 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 

இந்த இரவு ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதை போன்று பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதிக்கான விரைவு பேருந்து முன்பதிவினை அரசு போக்குவரத்துக் கழகம் நிறுத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பொங்கல் முடித்து சென்னை சொந்த ஊரிலிருந்து திரும்புவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்று முன்பதிவு செய்துள்ளவர்கள் வேறு தேதியில் பயணிக்க தேவையான ஏற்பாடுகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். ஜனவரி 16 தேதி மட்டும் விரைவு பேருந்தில் பயணிக்க 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் வரும் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் என்பதால் பேருந்துகள் இயங்காது. அன்று பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்குப் பயண கட்டணத்தைத் திருப்பி தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்