Published on 17/12/2024 | Edited on 17/12/2024
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாத்தூர் அருகே உள்ள துலுக்கன் குறிச்சி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. உடனடியாக ஆலையிலிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியே ஓடினர். இதனால் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விருதுநகர் சாத்தூர் பகுதியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.