தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா இன்று கூறுகையில்,
"கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்திய மக்களைக் காப்பாற்றுவதற்கு இந்தியபிரதமர் மோடி நேற்று 24.3.2020 நள்ளிரவு 12 மணிமுதல் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசின் முடிவு ஒருபுறம் வரவேற்கத்தக்கது தான் அதே சமயத்தில் பெரும்பாலான இடங்களில் பெரியவர்கள் ,கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் மற்ற மாநிலங்களில் நடைமுறை உள்ளதுபோல அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்விகி, ஸோமோட்டோ போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குக் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வழங்கி அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமென த.மா.கா இளைஞரணி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.