உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் - விஜயகாந்த்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரிடம் அவர் கடிதம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறினார்.