Skip to main content

’முதல் ரெண்டு ரவுண்டுதாங்க டென்சன்;அப்புறம் பாருங்க...’ –ஓட்டு எண்ண தயார்படுத்தப்பட்ட அலுவலர்கள்

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 


ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் 386 அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு எப்படி மின்னணு இயந்திரத்தில் உள்ள ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்ற பயிற்சி இன்று கொடுக்கப்பட்டது. 

 

ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை  தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள்  ஈரோடு அடுத்த சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரியில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  வருகிற 23ம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

 

v

 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு  அதில் தலா 3 அலு வலர்கள்  ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர்.  இந்தப் பணியில் 252 பேரும், இதில் நுண் பார்வையாளர்கள் 84 பேரும் என மொத்தம் 336 அலுவலர்கள் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர்.  மேலும் கூடுதலாக 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் ஈரோட்டில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் இந்த 386 அலுவலர்களுக்கும்  பயிற்சி அளிக்கப்பட்டது.  பயிற்சிக்கு  மாவட்ட கலெக்டரும்,   தேர்தல் அலுவலருமான கதிரவன் தலைமை தாங்கினார். பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணும் பயிற்சி பெற்றவர்களுக்கு வருகிற 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்ல வேண்டும் அதன் பிறகு அங்கு  குலுக்கல் முறையில் அவர்கள் எந்த மேஜையில் பணி செய்ய உள்ளனர் என்ற விவரம் தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

 

இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார். மேலும் ஒட்டு எண்ணும் மையத்தில் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

 

"சார் முதல் இரண்டு ரவுண்டு தாங்க டென்சன். அப்புறம் பாருங்க ஓட்டு எண்ணிக்கை ஸ்பீடா போகும்" என தங்கள் அனுபவத்தை கூறுகிறார்கள் ஓட்டு எண்ணும் ஆபீசர்கள்.

சார்ந்த செய்திகள்