ஈரோடு புறநகரில் உள்ளது சித்தோடு பேரூராட்சி. இங்கு சுமார் 15 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். சித்தோடு பேரூராட்சி நிர்வாகம் சமீபத்தில் வரி உயர்வை அதிகரித்து உத்தரவிட்டது. அதன்படி மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி, கூடுதலாக குப்பை வரி என சுமார் 100 மடங்கு வரி உயர்வு அதிகரிக்கப்பட்டது. இதனை கைவிடக்கோரியும் பேரூராட்சி பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடால் மக்களுக்கு டெங்கு, மலேரியா நோய்கள் ஏற்படுகிறது.
சித்தோடு பேரூராட்சி நிர்வாகம் ஊரை சுகாதாரமாக வைக்க வேன்டியும் உட்சபட்ச வரி அதிகரிப்பை உடனே வாபஸ் பெற வேண்டும் என ஈரோடு தி.மு.க.சார்பில் சித்தோடு நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளருமான சு.முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அட்சிக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.