தரமற்ற கொசு மருந்துகளை வாங்கி உள்ளதால் டெங்குவை ஒழிக்க முடியவில்லை: ஜவாஹிருல்லா
தமிழக அரசு தரமற்ற கொசு மருந்துகளை வாங்கி உள்ளதால் தமிழகத்தில் டெங்குவை ஒழிக்க முடியவில்லை என மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு தரமற்ற கொசு மருந்துகளை வாங்கி உள்ளதால் தமிழகத்தில் டெங்குவை ஒழிக்க முடியவில்லை. டெங்குவை ஒழிக்க, மருத்துவ அவசர காலத்தை கொண்டு வந்து, தனியார் மருத்துவர்களை ஈடுபடுத்தி டெங்குவை ஒழிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறதே தவிர மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை. அதிமுக அரசில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கும் போது, அமைச்சர்களுக்குள் எப்பிடி ஒற்றுமை இருக்கும்? அதிமுக அரசு, மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.