ஊழல் புகாருக்குள்ளான சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனை, தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாண்டியனின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிடவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழல் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில், (இரண்டு கணக்குகளில்) கணக்கில் வராத 1 கோடியே 37 லட்சம் ரூபாயை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதேபோல், 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், 10 கோடிக்காண சொத்து ஆவணங்களும் சிக்கின. பாண்டியனிடம் இருந்து அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முறைகேடாக லஞ்சம் பெற்று அவர் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவரை தமிழக அரசு, பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், பாண்டியனின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறையினர், பாண்டியன் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.