Skip to main content

பாளையங்கோட்டை சிறையில் சூழலியல் ஆர்வளர் முகிலன் உண்ணாவிரதம்!

Published on 14/10/2017 | Edited on 14/10/2017
பாளையங்கோட்டை சிறையில் சூழலியல் ஆர்வளர்
முகிலன் உண்ணாவிரதம்!

ஆற்று மணல் கொள்ளையை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றியும் கண்டு அதற்காக பல முறை சிறை பல்வேறு வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தில் நிலுவையின்றி ஆஜராகி வரும் நிலையில் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சீருடை இல்லாத போலீசாரால் வழிமறித்து காவல் நிலைத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதியப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

சென்னை அம்பத்தூரில் அரசின் அனுமதி பெற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக விடுதலை போராட்ட வீரரும் பொதுவுடமை இயக்க தலைவருமான அய்யா நல்லகண்ணு அவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்திற்கு அலைக்கழிப்பதை கண்டித்தும்,

 ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்திய சிங்களவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் மீதான 132 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

கீழடி அகழ்வாராய்வை தொடர்ந்து நடத்த வேண்டும், மேற்கு மண்டலத்தை பாதிக்கக்கூடிய கெயில் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களை நிலத்தடி நீர் கொள்ளையால் பாலைவனமாக்கும் ஸ்டெர்லைட் மற்றும் DCW ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

சட்ட விரோதமாக தோழர் முகிலனை வெள்ளை வேன் கடத்தல் செய்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்றுவரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முகிலன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
 

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்