கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் நவீன். இவர் மெக்கானிக் இன்ஜினியர் படித்த இளைஞர் ஆவார். படிப்பு முடித்த பின், விளையாட்டு தனமாகவும், செல்லபிராணியாகவும் வெண் பன்றி வளர்க்க ஆரம்பித்தார். நாளடைவில் அப்பன்றிகளின் இனப்பெருக்கத்தால், எண்ணிக்கைகள் அதிகரிக்கவே மகிழ்ச்சி அடைந்த அந்த இளைஞர் வெண் பன்றி வளர்ப்பை, தனது தொழிலாகவே மாற்றி கொண்டார்.
இரண்டு பன்றிகளில் ஆரம்பித்த இவரது முயற்சியானது கடந்த 5 ஆண்டுகளில் 320 வெண் பன்றிகள் வரை கூடும் அளவிற்கு பாதுகாப்பு கூடாரங்கள், உணவு முறைகள், நோய் தாக்காமல் இருப்பதற்கு முன்னெசரிக்கை நடவடிக்கைகள், இனப்பெருக்க கால கட்டங்களில் செய்கின்ற வழிமுறைகள் என ஒவ்வொன்றும் குழந்தையை வளர்ப்பது போல் பார்த்து பார்த்து வளர்த்து வருகின்றார்.
மேலும் இந்த வெண் பன்றிகளை குட்டிகளாக விற்பனை செய்வது மற்றும் 120 கிலோ அடைந்ததும் உணவிற்காக விற்பனை செய்வது என இரண்டு வகை முறையில் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றார். இங்குள்ள பன்றிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பராமரிப்பு, ஆட்கள் கூலி என மாதம்தோறும் 50,000 ரூபாய் வரை செலவு செய்து வருகிறார். இப்பன்றிகளை சேலம், சென்னை, கோவை மற்றும் கேரளா என பல இடங்களில் இருந்து டன் கணக்கில் இடைத் தரகர்கள் வாங்கி செல்கின்றனர்.
இதனால் நேரடி கொள்முதல் செய்யமுடியாமல் இடைத்தரகர்கள் மூலம் ஏற்றுமதி நடப்பதால், ஒரு கிலோ 100 முதல் 110 ரூபாய் வரை, வாங்கிகொண்டு, வெளியே விற்கும் போது அதிக லாபத்திற்கு இடைதரகர்கள் விற்பனை செய்கின்றனர்.
இதனால் எனக்கு வருடத்திற்கு செலவு மற்ரும் லாபத்தை கணக்கிடும் போது, மிக சொற்பான தொகையே லாபம் ஈட்ட முடிகிறது. ஆனாலும் சோர்வடையாமலும், மனம் தளராமலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவதால் எனக்கு வருகின்ற தடைகளை பற்றி கவலை கொள்ளவில்லை என்று கூறுகிறார் .
தமிழக அரசானது தன்னைபோல் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வழிவகை செய்யும் வகையில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பிரின்ஸ் நவீன்