அவசர அழைப்பு: அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அனைத்து அமைச்சர்களும் இன்று சென்னையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கு இத்தகைய அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதில், அதிமுக பொதுக்குழு கூடும் தேதி குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.