Published on 22/11/2021 | Edited on 22/11/2021
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (21/11/2021) தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி- யிடம் கொரிய குடியரசு துணைத் தூதரகம் சார்பாக தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பு உபகரணங்கள் அடங்கிய 4,000 தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கூடுதலாக 70,000 முகக்கவசங்களும், 5 ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் கொரிய குடியரசு தூதரக ஜெனரல் யங்செயுப் குவான், டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், இன்கோ கொரிய கலாச்சார மைய இயக்குனர் ரதி ஜாஃபர், ஜோ சங்க்யுன், கிம் சாங்வூஆகியோர் கலந்து கொண்டனர்.