Skip to main content

“விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை ” - அமைச்சர் சக்கரபாணி

Published on 24/02/2025 | Edited on 24/02/2025

 

 Eligible women who have been absent for 3 months will be given entitlements

திண்டுக்கல்  மேற்கு மாவட்டம்  ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க  சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில்  சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 932 அடுக்குமாடி குடியிருப்புகள்  கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மகளிர்க்கு  விடியல் பயணம் திட்டத்தைக் கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 3 மாதத்தில் விடுபட்டுள்ள தகுதியுள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட  உள்ளது.  நகர்புறத்தில் வசிக்கும் அனைவருக்கும் விரைவில் பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

a

தமிழகத்திற்கு நிதி தராமல்  வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு  2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை தீர்க்கும் வகையில் ஆயிரம் கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஒட்டன்சத்திரத்தில் சாலை வசதி, சாக்கடை வசதி அமைக்கப்பட உள்ளது. அரசப்பிள்ளைபட்டி, கொல்லப்பட்டி காளஞ்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சர்வீஸ்  ரோடு அமைக்க நிதி பெறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் அரசின்  சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்  செல்ல வேண்டும்” என்றார்.

மேலும் கூட்டத்தில், வரும் மார்ச் 1ஆம் தேதி  முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பள்ளி மாணவர்கள், ஏழை எளியோருக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஒட்டன்சத்திரத்தில் 480 அடுக்குமாடிக் குடியிருப்புகள்  கட்டிக் கொடுத்த  முதலமைச்சர் ஸ்டாலின்,   அமைச்சர்கள் ஐ பெரியசாமி,  சக்கரபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல்,  இந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரம் வழங்குவது, 2026 சட்டமன்றத் தேர்தலில் நகரத்தில்  அதிக வாக்குகள் பெற்று தருதல், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய  அரசைக் கண்டித்தல், தமிழக அரசின் சாதனைகளை திண்ணைப் பிரச்சாரம் மற்றும்  துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களிடம் எடுத்துச்  செல்லு தல்உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி பொறுப்பாளர் பரணிமணி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், நகர அவைத்  தலைவர் சோமசுந்தரம், நகர பொருளாளர் அப்பாசாமி,நகர்மன்ற தலைவர்  திருமலைசாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன்,  மாவட்ட இளைஞரணி துணை  அமைப்பாளர் பாண்டியராஜன்,அரசு ஒப்பந்ததாரர் வேலுச்சாமி, உள்ளிட்ட நகர துணைச் செயலாளர்கள்,நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் இளமதி,  உள்ளிட்ட வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

சார்ந்த செய்திகள்