Skip to main content

சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் பயணச்சீட்டு வழங்க மின்னணு கருவி

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
சென்னையில் அனைத்து பேருந்துகளிலும்
பயணச்சீட்டு வழங்க மின்னணு கருவி

சென்னையில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணச்சீட்டு வழங்குவதற்காக வரும் 20ம் தேதியில் இருந்து மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரின் ஆணைப்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு பயணச்சீட்டு கருவிகளை முழுவீச்சில் விரிவாக்கம் செய்து, வரும் 20-ந் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக்கழகம், சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டை முழு அளவில் பயணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நடத்துனர்கள் பயணச்சீட்டு வழங்குவதிலும், பயணிகள் பயணச்சீட்டுகளை பெறுவதிலும் உள்ள நடைமுறை எளிதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்