Skip to main content

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலைநிறுத்தம்!!

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மின் பணிகள் பாதிக்கப்டப்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் 50  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மின்சாரப் பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கி இருந்து மின் பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

PROTEST


அப்போது, பணியை ஆய்வு செய்த மின் துறை அமைச்சர் தங்கமணி, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் அதிகமானோர் மின் பணிகளில் ஈடுபட்டதாலும் உள்@ர் இளைஞர்கள் துணையாக இருந்ததாலும் மின்பணிகள் வேகமாக நடந்தது. 20 நாட்களுக்கு பிறகு வெளியூர் மின் பணியாளர்கள் சென்றுவிட்டதால் பணியில் தொய்வு எற்பட்டது. 

 


இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், சிலட்டூர், கறம்பக்குடி, சுப்பிரமணியபுரம் மற்றும் பல மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த ம் மற்றும் நுழைவாயிலில் தர்ணா போன்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியபோது. குஜா புயலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மின் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த மின் துறை அமைச்சர் தங்கமணி, பணியில் உள்ள சிரமத்தை பார்த்து சிறப்பாக உள்ளது என்று சொன்னதுடன் பணிகள் முடிந்ததும் பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்தார். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விடுப்புகூட அளிக்காமல் பொறியாளர்கள் வேலை வாங்கினார்கள். தற்போது ஓரளவு மின் சீரமைப்பு பணி முடிந்துள்ள நிலையில் கோரிக்கையை நிறைவேற்றவில்லை ஆனால் அதன் பிறகு அது பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் அதிகாரிகள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள். அதனால் முதல்கட்டமாக அடையாள வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்கங்களிடம் பேசி போராட்டம் விரைவில் அறிவித்து நடத்தப்படும் என்றனர். 
 

சார்ந்த செய்திகள்