Skip to main content

கடுமையான பாதுகாப்போடு தொடங்கியது பேராவூரணி ஒன்றிய தேர்தல்

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் பல ஒன்றிய, குழுக்களையும் தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் போனது ஆளும் அதிமுகவுக்கு. தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகளில் அதிமுகவுக்கு 7, பாஜ க1, சுயேட்சை 1 என 9 இடங்களை அதிமுகவும், 6 இடங்களை திமுகவும் கைப்பற்றி உள்ளது.

இதில் அதிமுகவுக்கு சேர்மன் ஆகும் வாய்ப்பு இருந்தாலும் இன ரீதியிலான உள்கட்சி பிரச்சனையால் பறிபோகும் சூழ்நிலை உருவாகி பதவி ஏற்பு முடிந்து ஆள் கடத்தல் வரை சென்று கலவரமானது.

 

 The election began with fierce security in peravurani

 

அதிமுக சேர்மன் வேட்பாளராக மாஜி சமஉ திருஞானசம்மந்தம் தன் மருமகள் சசிகலா ரவிசங்கரை முன்னிறுத்தி பதவி ஏற்று வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்களை தூக்க தயாராக நிற்க.. நான் தான் ஒ.செ அதனால நான் தான் சேர்மன் ஆகனும் அதை நினைத்துதான் ரூ 40 லட்சம் செலவு செய்து ஜெயித்திருக்கிறேன் என்று ஒ.செ துரைமாணிக்கம் மாஜியிடம் மல்லுக்கு நின்றார். ஜாதி அரசியல் செய்வதாக ஒ செ குற்றம்சாட்டினார்.

 

 The election began with fierce security in peravurani

 

இந்த உள்குத்து கலவரத்தை உற்றுக் கவனித்த திமுக நிர்வாகிகள் அதிமுகவில் 7 வது வார்டில் வென்ற மாலா போத்தியப்பனை சேர்மன் ஆக்க திமுக உதவும். சேர்மன் ஆனதும் துணை சேர்மன் திமுகவுக்கு கொடுத்துட்டு கொஞ்ச நாள்ல திமுகவுல இணையனும் என்று ஒப்பந்தம் போட்டு ஆதரவுகரம் நீட்ட மற்றொரு அதிமுக கவுன்சிலரும் துணைக்கு வருவதாக சொன்னார். அதனால் எங்கம்மாவுக்கு தான் சேர்மன் பதவி வேண்டும் என்று மாலாவின் மகன் குமாரும் கலவரத்தில் கலந்துகொண்டு குரலை உயர்த்தினார். நாங்க சாதி அரசியல் செய்றோம்ன்னு சொல்றீங்க அப்ப இது சாதி அரசியல் இல்லயா? என்று மாஜி தரப்பு குரலை உயர்த்த ஒருவழியாக பதவி ஏற்ற கவுன்சிலர்கள் வெளியே சென்றனர்.
 

இந்த நிலையில் அதிமுகவுக்குள் இருந்த உள்கட்சி பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், இன்று 11 ந் தேதி சேர்மன் தேர்தலுக்காக திமுக தரப்பு கவுன்சிலர்கள் 6 பேரும் அவர்களின் ஓட்டை வாங்க தயாராக வேட்பாளராக அதிமுக மாலா போத்தியப்பன் என மொத்தம் 7 கவுன்சிலர்கள் மட்டும் வந்திருந்தனர். ஆனால் அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் யாரும் தேர்தலில் கலந்துகொள்ள வரவில்லை. அதனால் நீண்ட நேரம் வரை காத்திருந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் நடத்த போதிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். 

 

 The election began with fierce security in peravurani


தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பை நோட்டிஸ் போர்டில் ஒட்டினார்கள். ஆளுங்கட்சியே தேர்தலை புறக்கணித்திருந்ததால் பெரும்  பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று பேராவூரணி ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே பரபரப்பான நிலையில் தேர்தல் தொடங்கியுள்ளது. 15 கவுன்சிலர்களும் தேர்தல் மையத்திற்குள் சென்றுள்ளனர்.இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்