Skip to main content

தமிழ் கடவுளுக்கு சிறப்பு செய்த ஈழத் தமிழர்கள்...

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

 

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் கடவுளாக வணங்குவதும் அதற்கு விழா எடுத்து சிறப்பு செய்வது என்றால் தமிழ் கடவுளான முருகப் பெருமானைத்தான். தமிழ்நாட்டில் தான் விநாயகர் உட்பட பல வடநாட்டு தெய்வங்களை வணங்கும் செயல்பாடு சமீபகாலமாக உடுருவியுள்ளது.

இருப்பினும் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்து வசிக்கும் ஈழத் தமிழர்கள் முருகபெருமானுக்கு சிறப்பான விழா எடுத்துள்ளார்கள்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சென்ற 1991 ம் ஆண்டு இங்குள்ள அகதிகள் முகாமிற்கு வந்த மக்கள் அந்த ஆண்டு முதல் அங்குள்ள முருக பக்தர்கள் ஒன்றிணைந்து அலகு குத்தி பறவைக்காவடி ஊர்வலம் என பல நிகழ்ச்சிகளை  நடத்தி வருகின்றனர்.  

அதன்படி இது 25 வது ஆண்டு பறவைக்காவடி ஊர்வலம் இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று டணாய்க்கன் கோட்டை கோவிலில் சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அலகு குத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட முருகன் தேர் பவனியுடன் பக்தர்கள் பறவைக்காவடியில் வாணில் தொங்கியபடி மேளதாளங்களுடன் அந்த ஊர்வலம் புறப்பட்டது. 

அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள் காவடியாட்டம் ஆடியபடி சென்றனர். டணாய்க்கன் கோட்டையில் புறப்பட்ட ஊர்வலம் பவாளி சாகர் பஸ்நிலையம், மார்க்கெட் சதுக்கம், சிவில் குடியிருப்பு  வழியாக இலங்கை அகதிகள் முகாமில் உள்ள நாகம்மாள் ஆலயத்தை வந்தடைந்தது. இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில்  ஈழத் தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்