Skip to main content

'சட்டமன்றத்திலேயே கூறிவிட்டோம் இஸ்லாமியர்கள் அச்சப்பட தேவையில்லை...''-எடப்பாடி மதுரையில் பேட்டி

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

திண்டுகல்லில் நடைபெற்ற மருத்துவகல்லூரி திறப்புவிழாவிற்காக மதுரை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

 

edappady palanisamy in madurai

 

தமிழகத்தில் கரோனோ பாதிப்பு அதிகமாக இல்லை. எல்கேஜி,யூகேஜி குழந்தைகளுக்கு  15 நாள் விடுமுறை நிறுத்திவைக்கவில்லை. கரோனோ குறித்து சுகாதாரதுறை மற்றும் சம்பத்தப்பட்ட துறை அமைச்சர் ஆலோசித்து தேவையான முன்னெச்சரிகை நடைவெடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. 

ரஜினி கட்சியை ஆரம்பிக்கவில்லை, அதுபற்றி கற்பனையான கருத்து கூற இயலாது. கமலின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்துவிட்டோம். ஜனநாயக நாட்டில் யாரவேண்டுமால் கட்சி ஆரம்பிக்கலாம், மக்களை சந்தித்து கொள்ளலாம். தேர்தலுக்கு பிறகு அமமுக இருக்குமா என்பதை பார்ப்போம். சிஏஏவால் இஸ்லாமியர்கள் அச்சப்பட தேவையில்லை என சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக நேற்றே கூறப்பட்டுவிட்டது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்