Skip to main content

டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துவிட்டு சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி?

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

Edappadi Palaniswami will return to Chennai after completing his trip to Delhi early?

 

டெல்லிக்கு நான்கு பயணமாக சென்ற அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாட்களிலேயே சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துக் கொள்வதற்காக வெள்ளிக்கிழமை அன்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். வரும் திங்கள்கிழமை அன்று நடைபெறும் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். 

 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு தமிழக அரசு அனுமதி, அ.தி.மு.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் உள்ளிட்ட காரணங்களால் தனது டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்