Skip to main content

எடப்பாடி பழனிசாமி வழக்கு: அறப்போர் இயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! 

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Edappadi Palaniswami case: High Court notice to the charity movement!

 

எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சாலை அமைப்பதில் இழப்பு ஏற்படுத்தியதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அறப்போர் இயக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பியதற்காக ரூபாய் 1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கு இன்று (02/08/2022) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள மானநஷ்ட ஈடுக்கோரிய மனுவுக்கு விளக்கம் கேட்டு அறப்பேர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது 


 

சார்ந்த செய்திகள்