தமிழகத்தின் 34 வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது. நவம்பர் 28ந் தேதி இதற்கான விழா திருப்பத்தூரில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய மாவட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் 34வது மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூரைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
திருப்பத்தூர் நகரைச் சுற்றிலும் 10 சிவ ஆலயங்கள் இருப்பதால் திருப்புத்தூர் எனப் பெயரிடப்பட்டு காலப்போக்கில் திருப்பத்தூர் என மருவியதாக கூறுகின்றனர். திருப்பத்தூரின் ஒரு பகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியுள்ளது என்றால் மற்றொரு புறம் தோல் தொழிற்சாலைகளை நம்பியுள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது, திருப்பத்தூர் மாவட்டமாக இருந்தது. பின்னர் 1792ம் ஆண்டு சேலம் மாவட்டத்துடன் திருப்பத்தூர் நகரம் என்று இணைக்கப்பட்டது. இருந்தும் சேலத்தின் தலைநகராக திருப்பத்தூர் இருந்துள்ளது. அதன்பின்னர், 1803-ம் ஆண்டு திருப்பத்தூர் வடஆற்காடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 2019ல் திருப்பத்தூர் என்கிற தனிமாவட்டம் உருவாகியுள்ளது.
ஆயிரத்து 797 புள்ளி ஒன்பது 2 சதுர கிலோ மீட்டர் மொத்தப் பரப்பளவு கொண்ட திருப்பத்தூரில், 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 மக்கள் தொகையை உள்ளடக்கிய புதிய திருப்பதூரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி இந்த திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் தான் வருகிறது என்பது குறிப்பிடதக்கது.