சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ஆலோசனை நடத்த சேலம் வந்துள்ளேன். இங்கு நான் வந்திருப்பதை அறிந்த பாமக தலைவர் ஜிகே.மணி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இது தற்செயலாக நடந்த சந்திப்பே தவிர தேர்தல் பற்றி பேச நடந்த சந்திப்பு அல்ல,
தேமுதிகவுடன் எந்த இழுபறியும் இல்லை, இன்று திமுகவில் கூட்டணியில் இருக்கும் வைகோ திமுகவை எவ்வளவு வசை பாடினார் என உங்களுக்கு தெரியுமே. ஆனால் இப்போது எப்படி புகழ்ந்து பேசுகின்றார் என்பதும் தெரியும்.
தேமுதிக என்ன சொன்னார்கள், எதிர்க்கட்சியாக இருக்கும் போது தட்டிகேட்ப்போம். நல்லது செய்தால் பாராட்டுவோம். கொள்கையிலிருந்து மாறுபட்டால் பேசுவோம் என்று சொல்லியுள்ளார்களே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. நான் கூட படித்து பார்த்தேன் நல்லதை வரவேற்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் கிடையாது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு 130 கோடி மக்கள் தொகை கொண்ட மிக பெரிய நாடு, நாட்டை ஆள தகுதியான திறமை வாய்ந்த ஒருவர் பதவியேற்றுக்கொள்ளவேண்டும், அதுதான் எங்கள் நோக்கம். அதனடிப்படையில் பாஜகவிற்கு ஆதரவளிக்கிறோம் என்றார்.
7 தமிழர்கள் விடுதலை பற்றிய கேள்விக்கு,
7 தமிழர்கள் எவ்வளவு நாள் சிறையில் உள்ளார்கள் அவர்களை என்றாவது பரோலில் வெளியே கொண்டுவர திமுக முயற்சி செய்துள்ளதா? நாங்கதான் பரோலில் வர முயற்சியெடுத்து முடித்தோம். அதேபோல் அமைச்சரவை கூட்டத்திலும் அவர்களை விடுவிக்கவேண்டும் என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் திமுக 7 பேர் விடுதலைக்கு எந்த சிரத்தையும் எடுக்கவில்லை எனவே எங்களை பற்றி பேச அவர்களுக்கு தகுதியில்லை என்றார்.