Skip to main content

சுஜித் மீட்பு விஷயத்தில் இமேஜ் கெட்டு போயிடும் என்று நினைக்கும் எடப்பாடி!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு துணையாக வீட்டுக்குள்ளேயே இருந்த எம்.பி. ஜோதிமணி, மீட்பு முயற்சிகள் 3 நாட்களைக் கடந்த நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, "பாறையைக் குடையும் முடிவுகள் சாத்தியமில்லை என்று நான் அமைச்சரிடம் 27-10-2019 முதல் கூறிவருகிறேன். ஒரு மெஷின் 16 மணிநேரத்தில் 24 அடிதான் குடைகிறது என்றால், அதைவிட 3 மடங்கு திறன் வாய்ந்த மெஷின் 75 அடி குடைய மீண்டும் 16 மணிநேரம் தேவை. மேலும் 10 அடி தேவைப்படும் அதற்கு 2 மணிநேரம். ஆக 18 மணி நேரம் ஆகும் நீளவாக்கில் வெட்டுவதற்கு. பின்பு, அகலத்தில் வெட்ட வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லை. 
 

incident



மேலும் ஒரு ஐடியா தோல்வியடைந்தால், மாற்று ஐடியா இல்லை. மெஷின் மூலம் குடைவது மக்களிடையே தவறான நம்பிக்கை கொடுக்கும் என அச்சப்படுகிறேன். இந்தக் கட்டத்தில்கூட நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெளிவில்லாமல் இருந்து பயனில்லை. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அரசாங்க இமேஜ் கெட்டுபோயிடும் என்று பார்க்கிறார்கள். முதல்வர்தான் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். உடனே முதல்வர் தரப்பிலிருந்து "மோடியிடம் குழந்தையின் மீட்பு குறித்து பேசினேன். 3 அமைச்சர்கள் மேற்பார்வையில் குழந்தை மீட்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்