அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை வேண்டாம் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில்,
மாநில அரசுகளின் கருத்து கேட்காமல் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு, அணை பாதுகாப்பு மசோதாவில் ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அந்த அணையின் இயக்கமும், பராமரிப்பும் தேசிய பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் அண்டை மாநிலங்களில் இருந்தாலும் அவை தமிழகத்துக்கு சொந்தமாக இருப்பதையும் தமிழகமே அந்த அணைகளை இயக்கியும் பராமரித்தும் வருவதை சுட்டிக்காட்டி இந்த சூழ்நிலையில் மாநிலங்கள் இடையே ஒருமித்த கருத்து எட்டும்வரை அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கைகளை தொடர வேண்டாம் என மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.