கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முதல் அமைச்சர் தனது ஆய்வுப் பணிகளை இன்று காலை துவங்கினார். நாகப்பட்டிணத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மின்சாரப் பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணைகளை வழங்கினார்.
பிரதாபராமபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டள்ள இடத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து காமேஸ்வரம் சென்றார். விழுந்தமாவடியில் மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது பொதுமக்கள் மின்சாரம் வரவில்லை என்றனர். ஐந்து நாட்களில் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிடும் என்றார். வேட்டைக்காரன் இருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் காரில் சென்று ஆய்வு செய்கிறார்.
மத்திய குழுவினர் பார்வையிடும்போது பல இடங்களில் மக்கள் தங்கள் இடங்களில் வந்து பார்வையிடுமாறு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் முதல் அமைச்சர் சில இடங்களை பார்வையிடுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வருகையின்போது மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.