Published on 19/12/2019 | Edited on 19/12/2019
இந்தியாவிலேயே முதன்முதலாக ‘இ-ஸ்கூட்டர்’ என அழைக்கப்படும் அதிநவின போக்குவரத்து காவல்துறைக்கான ரோந்து வாகனங்கள் சென்னையில் நேற்று(18.12.2019) அறிமுகப்படுத்தப்பள்ளன. ஒரு காவலர் நின்றுகொண்டே பயணிக்கும் வகையில் இரு சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை சாலைகளில் ரோந்துபணியில் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வாகனம் ஓட்டும் பெண்களை பரிசோதிப்பதற்காக சிறப்பு பெண்கள் போக்குவரத்துப் காவல் பிரிவும் துவங்கப்பட்டது.