Skip to main content

உரிமம் இன்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை... டி.எஸ்.பி எச்சரிக்கை!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு விற்பனை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் எஸ் ஐ க்கள் உட்பட போலீசார் மற்றும் பட்டாசு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு, டி.எஸ்.பி. இராமநாதன் தலைமை தாங்கி பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது
 

dsp meeting



"பட்டாசு கடைகளின் உரிமத்தை தணிக்கையின் போது காண்பிப்பதோடு, வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பட்டாசு கடைக்கு பக்கத்தில் டீ கடை, ஓட்டல்கள் இருக்கக் கூடாது, சிறுவர்களை பணியில் அமர்த்தக் கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு பேரலில் தண்ணீர், மற்றொரு பேரலில் மணல் அல்லது தீயணைப்பு கருவி வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை ஒட்டுமொத்தமாக வைக்காமல் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு முன்பாக சிகரெட் பிடித்தல் மற்றும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. கடைகளுக்கு முன்பாக போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பட்டாசுகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்". இவ்வாறு டி.எஸ்.பி இராமநாதன் பேசினார். 


டாடா ஏஸ் வண்டியில் பட்டாசு ஏற்றி சென்ற போது 30.9.19. அன்று செஞ்சி அருகே வெடித்து சிதறியதில் மூவர் இறந்தார்கள். இதனால் தமிழகம் முழுதும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்னர் அதன் பிரதிபலிப்புதான் இந்த கள்ளக்குறிச்சி ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்