கடந்த வாரம் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைகளை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்யவில்லை என்றும் சுத்தம் செய்ய நிதி இல்லை என்று நகராட்சி காரணம் சொல்லும் நகராட்சிக்கு நிதி கொடுக்க பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.
அடுத்து 3ம் நம்பர் லாட்டரி சீட்டால் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் குடும்பங்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்துவிட்டார்கள் என்று தாலிக்கயிற்றுடன் சென்று கூலி தொழிலாளிகளின் தாலியை காப்பாற்றுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில் நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடும் தொடங்கிவிட்டது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக கீழவீதி பொதுமக்களுக்கு புதிய குடங்களும் குடிதண்ணீரையும் இலவசமாக வழங்கினார்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியினர். அடுத்து இன்னும் நிறைய செய்வோம் என்று சொல்லி சென்றனர்.