Published on 04/01/2021 | Edited on 04/01/2021
விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் ஒரு மாதம் முன்பு பெய்த பலத்த மழையால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் இரவோடு இரவாக தண்ணீரை வெளியேற்ற வாய்க்கால் தோண்டப்பட்டது. ஆனால், தோண்டப்பட்ட வாய்கால் ஒரு மாதம் ஆகியும் இதுவரை மூடப்படவில்லை.
இதனால் தற்போது அதில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த வாய்க்கால் இருக்குமிடத்தில் கடைகள் அதிகமாக உள்ளதாலும், பொங்கல் பண்டிகை வரும் நிலையில் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இதனால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வாய்க்கால் பகுதி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்க ஒப்பந்தகாரர் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.