Skip to main content

"இனி தமிழில் பேசக் கூடாது... ரயில்வேயின் அடுத்த அதிரடி..!"

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

அதில்,  "ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், கட்டுப்பாட்டு அலுவலருக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் நோக்கிலும், இரு தரப்புக்கும் இடையேயான தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை களையும் நோக்கிலும் இந்த உத்தரவு பிறக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தாங்கள் பிறப்பிக்கும் கட்டளைகள் அனைத்தும் தெளிவானதாகவும், ரயில் நிலைய அதிகாரிகளால் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது கட்டுப்பாட்டு அலுவலர்களின் கடமை என்பதால், இத்தகைய உத்தரவு அவசியமாகிறது" என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

 

 "Do not talk in Tamil ... the next action of Railway ..!"


 

கடந்த மாதம் 10-ந்தேதி மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே வந்தன. எனினும், ரயில் ஓட்டுநர்களின் துரித நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதாவது திருமங்கலம் ஸ்டேசன் மாஸ்டர் ஜெயக்குமார், மதுரையில் இருந்து நெல்லை செல்லும் வழித்தடத்தில் விரைவு ரயிலை அனுப்பி இருப்பதாகவும், சிக்னல் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே, அந்த வழித்தடத்தில் வேறு ரயிலை அனுமதிக்க வேண்டாம் என்று கள்ளிக்குடி ஸ்டேசன் மாஸ்டர் சிவசிங் மீனாவிற்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். எதிர்முனையில் பேசியவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், புரிந்தும் புரியாமலும் சரி என்று சொல்லியிருக்கிறார். அந்த சமயத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில் கள்ளிக்குடி வந்தது. அந்த ரயிலை, நெல்லை விரைவு ரயில் வந்து கொண்டிருக்கும் பாதையில் செல்ல அனுமதித்துள்ளார் சிவசிங்மீனா.

 

 

 "Do not talk in Tamil ... the next action of Railway ..!"



 
இருந்தாலும் சிவசிங் மீனாவிடம் பேசியதில் இருந்து ஒரு வித சந்தேகத்தில் இருந்த ஜெயக்குமார், கள்ளிக்குடி ரயில்வே கேட் கீப்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் அதிர்ச்சியான தகவலை சொன்னார். அதாவது சற்று முன்புதான் கள்ளிக்குடி ரயில் நிலையத்தை தாண்டி செங்கோட்டை பயணிகள் ரயில் மதுரை நோக்கிச் செல்வதாக தெரிவித்தார். இதனால், சுதாரித்த ஜெயக்குமார், திருப்பரங்குன்றம் ஸ்டேசன் மாஸ்டரை தொடர்பு கொண்டு, ஒரே வழித்தடத்தில் எதிரெதிர் திசையில் இயக்கப்படும் 2 ரயில்களையும் உடனடியாக நிறுத்தச் சொன்னார்.

 

ஜெயக்குமாரின் சமயோசித முயற்சியால், அன்றைய தினம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ரயில் நிலைய அதிகாரி ஆகியோருக்கு இடையே தொடர்புகொள்வதில் ஏற்பட்ட மொழி சிக்கலே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. இதை அடுத்து, இனி யாரும் தகவல் தொடர்பு கொள்ளும்போது, பிராந்திய மொழியில் பேசக் கூடாது என்று தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்