இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா திமுக வெற்றி பெற்றால் தனது நாக்கை அறுத்துக் காணிக்கையாக்குவதாக கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதேபோல் செய்தார். இதனை அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், "திமுக வெற்றிக்காக வனிதா என்ற சகோதரி தன் நாக்கை இழந்தார் என்பதை அறிந்து வருந்துகிறேன்; இதுபோன்ற துயரங்களை ஏற்படுத்தாமல், ஏழை - எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை காணிக்கையாக செலுத்துங்கள்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம், தற்போது பெரிய சோகத்திலும், அதிர்ச்சியிலும் உரைந்துள்ளது. காரணம், கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டரான விவசாயி உலகநாதன் என்பவர் தான் வேண்டியப்படி திமுக வெற்றி பெற்றதற்காக தனது நிறைவேற்றுவதாக கூறி கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விவாகரம் அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலஜி உட்பட திமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலகநாதன், தான் வைத்த பிரார்த்தனையை நிறைவேற்றியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், பலருக்கு அவர் ஏன் இப்படி செய்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்திலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைக்க வேண்டும். கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்றும் அப்படி நடந்தால் தனது உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் மண்மங்கலம் காளியம்மன் கோவிலில் வேண்டுதல் வைத்துள்ளார். அதன்படி இன்று மண்மங்கலம் காளியம்மன் கோவிலில் முன்பு தன்னை தானே தீயிட்டு மாய்த்துகொண்டார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்ற உலகநாதன், திமுக தொண்டர்களுக்கும், முதல்வருக்கும், அமைச்சருக்கும், ஒரு கடிதத்ததை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவருடைய வேண்டுதல் குறித்து கூறுகையில், ‘தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும், தம்பி செந்தில்பாலாஜி அமைச்சராக வேண்டும், திமுகவை தரைகுறைவாக பேசிய எடப்பாடியின் ஆட்சி ஒழிய வேண்டும் என்று நான் வைத்த வேண்டுதல் நிறைவேறிற்று.
கரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பட்டும் என்று காத்திருந்தேன். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. நான் காளியின் அருள் பெற்றவன். எனவே இனி எப்போதுமே திமுகவின் ஆட்சி மட்டும் தான் நிலைத்து நிற்கும்’ என்று அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில் தன்னுடைய இறுதி ஆசையாக தன்னுடைய மகன் விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அவரை பணியிடமாற்றம் செய்து, அமைச்சர் நேரடி பார்வையில் வைத்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளார். என்னுடைய வேண்டுதல் பிரகாரம் நான் என்னுடைய உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது கரூர் மாவட்டம் முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக தொண்டர்களும் இந்த செய்தி கேட்டு பலர் உலகநாதன் வீட்டின் முன்பு கூடியுள்ளனர். தற்போது, உலகநாதனின் உடல் பிரேதபரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது. அங்கும் ஏராளமான திமுகவினர் கூடியுள்ளனர்.
உலகநாதன் வேண்டுதலை நிறைவேற்றிய மண்மங்கலம் காளியம்மன் கோவில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் குலதெய்வ கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.