Skip to main content

நீதி வழங்கும் துணிவு அரசுக்கு இருந்திருந்தால் உயிர் பறித்த போலீசார் சுதந்திரமாக உலவ முடியுமா?-ஸ்டாலின் கேள்வி  

Published on 28/06/2020 | Edited on 29/06/2020

 

dmk Stalin Question

 

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சி.பி.ஐ.-க்கு மாற்றப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

 

தற்போது இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, பல்வேறு தரப்பினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், ஊடகத்தின் இரண்டு நாள் அழுத்தத்தால் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றியுள்ளார் முதல்வர் எனத் தெரிவித்துள்ள ஸ்டாலின், நீதி வழங்கும் அரசியல் துணிவு அரசுக்கு இருந்திருந்தால் உயிர் பறித்த போலீசார் சுதந்திரமாக உலவ முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்