Skip to main content

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்ட பழனி பாதயாத்திரை பக்தர்கள்!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

ரெட்டியார்சத்திரத்தில் திமுக கூட்டனி கட்சிகள் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியகுழு தலைவருமான சிவகுருசாமி தலைமையில் நடைபெற்றது. 

 

DMK Signature Movement Against Citizenship Amendment Act

 



திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளியில் திமுக தலைமையிலான கூட்டனி கட்சிகள் சார்பாக (மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியகுழு தலைவருமான ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் - பழனிசாலையில் குடியுரிமை சடத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது பழனிக்கு பாதயாத்தரையாக சென்ற பக்தர்களும், முதியோர்களும் ஆர்வமுடன் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் தண்டபானி, திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.பாஸ்கரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் தலைவர் கு.சத்தியமூர்த்தி, ஒன்றியகுழு துணைத்தலைவர் டி.ராஜேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் பண்ணைப்பட்டி ஜெகநாதன், கன்னிவாடி இளங்கோ, பேரூர்கழக செயலாளர்கள் கன்னிவாடி வழக்கறிஞர் சண்முகம், ஸ்ரீராமபுரம் ராஜா, மற்றும் ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையன், கொத்தப்புள்ளி ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, துணைத்தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அமுதவள்ளி, வக்கம்பட்டி கானிக்கைசாமி, மற்றும் கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், கூட்டனி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

        

சார்ந்த செய்திகள்