Published on 21/06/2021 | Edited on 21/06/2021

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், திமுக தலைமையிலான புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நிலையில், தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவைக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்தொடர் வருகின்ற 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் பேரவையில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.