Skip to main content

பதவியேற்பு விழா- மு.க.ஸ்டாலினுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றியது. மேலும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இந்த கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களை கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 dmk mk stalin has been invite jharkhand cm oath ceremony for hemant soren


அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநரை சந்தித்த ஹேமந்த் சோரன், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து, டிசம்பர் 29- ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இரண்டாவது முறையாக தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். 

டிசம்பர் 29- ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் ஹேமந்த் சோரன்.

 dmk mk stalin has been invite jharkhand cm oath ceremony for hemant soren

அதன் தொடர்ச்சியாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்