திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய தி.மு.க சார்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் கணவாய்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஐ.பி. செந்தில் குமார், எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இக்கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் வயதான பெண்மணி ஒருவர் தனக்கு கலைஞர் ஆட்சியில் கொடுத்த முதியோர் உதவி தொகையை அ.தி.மு.கவினர் நிறுத்திவிட்டதாகவும் அதனைத் திரும்பப் பெற்றுத் தருவதாக கூறி அப்பகுதி அ.தி.மு.கவினர் பலமுறை தன்னிடம் உறுதி அளித்தும் இதுவரை எனக்கு இதுவரை பணம் வரவில்லை என அழுது புலம்பினார்.
இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், “திண்டுக்கல் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகையினை தி.மு.க ஆட்சியில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அவர்களில் 70 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதை அடுத்துவந்த அ.தி.மு.கவினர் நிறுத்திவிட்டனர். பலமுறை போராடியும் இன்று வரை அவர்கள் அதை வழங்கவில்லை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அடுத்த ஆண்டு மலர்ந்ததும் முதியவர்கள் அனைவருக்கும் முறையான உதவித்தொகையும் வழங்கப்படும்.” என தெரிவித்தார்.
மேலும் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் அ.தி.மு.க அரசு கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.