திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்வரும், முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் ஜீன் 3 ஆம் தேதி நடைபெற உள்ள பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஆத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான காணிக்கைசாமி தலைமைதாங்கினார். ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் மார்கிரேட் மேரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் மணலூர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் நெல்லூர் மலைச்சாமி, மேற்கு ஒன்றிய பொருளாளர் தேவரப்பன்பட்டி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் பேசும்போது, “மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி கடந்த பத்து வருடங்களாக நாம் கலைஞர் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாக கொண்டாடிவருகிறோம். இவ்வருடம் நூறாண்டு முடிந்து நூற்று ஒன்றாவது ஆண்டு தொடங்க உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் இருப்பதால் ஒரு சில கிராமங்களில் கொடிக்கம்பங்கள் ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. அந்தப் பகுதியில் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிய பின் அருகில் உள்ள மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர்கள் இல்லங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கிடவேண்டும். இதுதவிர அனைத்து கிளை கழகங்களிலும் ஒலிப்பெருக்கி வைத்து கலைஞரின் புகழ் பரப்பும் பாடல்களை ஒலிபரப்ப செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததோடு திண்டுக்கல் மாவட்டத்திலேயே கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ஒன்றியம் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் என்ற பெருமையை நாம் பெற வேண்டும்” என்றுகூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரக்கல்காங்கேயன், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் அய்யம்பாளையம் ரேகா ஐயப்பன், சித்தையன்கோட்டை போதும்பொண்ணு முரளி, பேரூர் கழகச்செயலாளர்கள் சித்தையன்கோட்டை சக்திவேல், அய்யம்பாளையம் தங்கராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சீவல்சரகு ராணி ராஜேந்திரன், அக்கரைப்பட்டி லட்சுமி சக்திவேல், வீரக்கல் ராஜேஸ்வரி தங்கவேல், ஆத்தூர் ஐ.ஜம்ருத்பேகம், போடிக்காமன்வாடி நாகலட்சுமி சசிக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வி காங்கேயன், சித்தரேவு சாதிக், அழகு சரவணக்குமார் உட்பட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் 87 கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆத்தூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கருத்தராஜா நன்றி கூறினார்!