Skip to main content

செந்துறையில் திமுக செயற்குழு கூட்டம்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் இன்று (3-2-2020) செந்துறை ஒன்றிய கழக அலுவலகத்தில் ஒன்றிய துணை பொறுப்பாளர் மா. சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக் கழக செயலாளர் மு.ஞானமூர்த்தி அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை பற்றி விளக்க உரை ஆற்றினார்.

 

dmk-committee-meeting

 



கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வி.கே.இராசேந்திரன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி.ஆர். பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர்.விசுவநாதன் , மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கலையரசன் , ஒன்றியப் பொருப்புக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.பெரியசாமி, வி. எழில்மாறன், வி.பி. நடேசன், மு.சபாபதி , ஊராட்சி கழக செயலாளர்கள் துரை, தேன்துளி, கோடி, புலேந்திரன், சி. நன்னன், நல்லுசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மு.சித்ரா, குழுமூர் ஒன்றிய கவுன்சிலர் ரெங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூடத்தில் இந்திய திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் முஸ்லீம், மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானதாக இருப்பதால் இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும. மேலும் மதச்சார்பற்ற முப்போக்கு கூட்டணியின் சார்பில் நமது கழகத் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க நமது ஒன்றியத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடந்து நடத்தி வரும் 8 ம் தேதிக்குள் கையெழுத்து படிவத்தை முடித்து கொடுக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை மார்ச் 1 ஆம் தேதி முதல் மாதம் முழுவதும் மக்கள் சேவை நாளாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

சார்ந்த செய்திகள்