தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணியிலிருந்து தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 26.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி கார் மீது அதிமுகவினர் கட்டையால் தாக்க முயன்றதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல் தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி குற்றம்சாட்டியுள்ள நிலையில், போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார்.