தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் மத்திய அரசை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும்,தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் ஸ்டாலின் தி.மு.க வின் தலைவராகியிருப்பது பாராட்டுக்குரியது.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் உறுதியுடன் இருக்கிறார்கள். மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அணி சேர்ந்து இருக்கிறோம். அது வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவ்வாறு கூறினார்.