Skip to main content

‘ஆட்சியிலிருந்து அந்தக் காரியங்களை ஆற்றுவதற்கான வாய்ப்பில்லை என்று சொன்னாலும்....’மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 


இன்று (27-08-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னிலையில் பா.ம.க மற்றும் தே.மு.தி.க போன்ற கட்சியினைச் சேர்ந்த பலர் தி.மு.கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது, தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்துப் பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:

 

’’அனைவருக்கும் வணக்கம்.  சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்டிருக்கும் ஓமலூர் தெற்கு ஒன்றியத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தே.மு.தி.க.,விலிருந்து விலகி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்றைக்கு தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

s

 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் உங்களை யெல்லாம் நான் இன்முகத்தோடு – மகிழ்ச்சியோடு – பூரிப்போடு – புலங்காகித உணர்வோடு வருக வருக வருக என வரவேற்கிறேன்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் ஏறக்குறைய 8 ஆண்டு காலமாக எதிர்க்கட்சி என்ற பொறுப்பில் இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருந்தாலும், ஆட்சியிலிருந்து என்னென்ன காரியங்களை செய்ய முடியுமோ, அந்தக் காரியங்களை ஆற்றுவதற்கான வாய்ப்பில்லை என்று சொன்னாலும், அவைகளை எல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் நிறைவேற்றிட வேண்டும் என்று, உரிமையோடு எடுத்துச் சொல்லி போராடக்கூடிய – வாதாடக்கூடிய பல்வேறு வியூங்களை அமைக்கும் நிலையில், தொடர்ந்து நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கின்றது.

 

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கும் நீங்கள் எல்லோரும், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் தி.மு.க.,தான் மக்களுடைய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது; மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் இன்றைக்கு நீங்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்திருக்கின்றீர்கள்.

 

அப்படி வந்து சேர்ந்திருக்கும் உங்களை சேலம் மத்திய மாவட்டத்தின் சார்பிலும், ஓமலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பிலும் நான் வரவேற்கிறேன். அதுமட்டுமல்ல, தலைமைக் கழகத்தின் சார்பிலும் உங்களையெல்லாம் நான் வருக வருக வருக என்று மீண்டும் வரவேற்று, எந்த நம்பிக்கையோடு இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்திருக்கின்றீர்களோ அந்த  நம்பிக்கையோடு நீங்கள் பணியாற்றுங்கள்.

 

எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் சிறப்பாக பணியாற்றும் உங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் வந்துச் சேரும். அந்த நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்  பணியாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டு, மீண்டும் உங்களின் வருகைக்கு நன்றி நன்றி என்று கூறி என் உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி வணக்கம்.’’
 

சார்ந்த செய்திகள்