Published on 06/07/2021 | Edited on 06/07/2021

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (06.07.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக விஜய் பிரபாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.