Skip to main content

அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

Published on 10/10/2024 | Edited on 10/10/2024
 'Diwali Bonus Ready'-Tamil Government Announcement

தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கி உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது.

மாதாந்திர சம்பள உச்சவரம்பான 21 ஆயிரம் வரை பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு  8.3% போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என இருபது விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிலையத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கும் 20 விழுக்காடு வரை போனஸ் வழங்கப்படும். மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ 8,400-ல் இருந்து அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை மிகை ஊதியம் பெறுவார்கள்.  மொத்தமாக 369.65 கோடி ரூபாய் மிக ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்