Skip to main content

கணவருடன் விவாகரத்து; சசிகலா புஷ்பாவுக்கு மறுமணம்?

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
sasi puspa


அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லியில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கும், ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் ராமசாமிக்கும் வரும் 26ம் தேதி டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

இதுபற்றி அவரது உதவியாளர் கூறும்போது, சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நீதிமன்ற விசாரணையில், நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்