பெரம்பலூர் சர்க்கரை ஆலை 2021 - 2022ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை துவக்கவிழா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பிரியா இ.ஆ.ப., தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை நிர்வாகியும் மாவட்ட வருவாய் அலுவலருமான க. ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
தலைமைக் கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணைத்தலைமை ரசாயினர் பெரியசாமி, துணைத் தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான் பிரீட்டோ, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, மற்றும் பொறியியல், ரசாயணப்பிரிவு, கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடப்பு ஆண்டில் சுமார் 3 லட்சம் டன் அரைப்பது என திட்டமிடப்பட்டுள்ளது. அரவை நாள் 107 நாள் எனவும், ஒரு நாளைக்கு 2,542 டன் அரைப்பது எனவும், இந்த ஆண்டில் 2,20,000 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சர்க்கரை கட்டுமானம் 9.5% கொண்டுவருவது என கூறினார்கள். தமிழ்நாடு அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ. 150 வழங்குவதற்கு ரூ. 138.83 கோடி அனுமதி அளித்து 6-12-2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2021 - 2022ஆம் ஆண்டுக்கு கரும்பு டன்னுக்கு ரூ. 2,900 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிகள் மு. ஞானமூர்த்தி, எ.கே. ராசேந்திரன், சீனிவாசன், சக்திவேல், ராமலிங்கம், டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், பெருமாள், பச்சமுத்து, பாலகிருஷ்ணன் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகாதேவி ஜெயபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.