கமிஷன் தகராறு; சாலை விபத்தில் மரணடைந்ததாக முகநூலில் செய்தி வெளியிட்டவர் கைது
கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அந்தப் பகுதியில் ஆங்கில மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் மன்சூர்அலி (வயது-42) என்பவர் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதில், மன்சூர்அலிக்கு கமிஷன் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரவி கொடுத்த கமிசன் பணம் போதாது என்று மன்சூர் அலி மேலும் பணம் தரவேண்டும் என்று கேட்டு இரவியை மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த நான்கு நாள் முன்பாக, கோவையில் நடைபெற்ற விபத்தில் மருந்துக்கடை உரிமையாளர் இரவி அகால மரணம் அடைந்து விட்டார் என்று அவரது புகைப்படத்துடன் ஒரு முகநூலில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதேபோல, இன்னொரு முகநூல் பக்கத்தில் இரவின் 8-வயது மகளும் வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார் என்றும், அவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் சிறுமியின் புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்த ஏராளமானவர்கள், இரவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்தனர். மேலும் இரவிக்கும் போன் செய்து குழந்தை காணாமல் போனது குறித்தும் விசாரித்தனர். அப்போதுதான் முகநூல் பக்கத்தில் இரவி மரணமடைந்ததாகவும், தனது குழந்தை மாயமாகி இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வெளியான தகவலையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த முகநூல் கணக்கு துவங்கியுள்ளவரின் விபரத்தை ஆய்வு செய்ததில், நடிகர் கமல்ஹாசனின் பெயரில், கமல்ஹாசன் படத்துடன் போலியாக உருவாக்கப்பட்டு இருந்தது. இது குறித்து இரவி, கோவை மாநகர சைபர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நிலத்தரகரான மன்சூர்அலிதான், நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி, அதில் இரவி மரணமடைந்து விட்டதாகவும், அவருடைய குழந்தை காணாமல் போய்விட்டதாகவும் தவறான தகவலை பரப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு மன்சூர் அலி கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப குற்ற தடுப்பு சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஐந்தாவது குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவசுப்பிரமணியம்