விஜய் ரசிகர்கள் நற்பணி மன்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
“இந்த விழாவிற்கு தலைமை தாங்கியதற்கு நான் பெருமைப்படுகிறேன். இது போன்ற நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் இப்போதுதான் எனக்கு இதெல்லாம் தெரிய வருகிறது. யார் யாருக்கு என்ன தேவையோ, கஷ்டங்கள் இருக்கோ அதை புரிந்து கொண்டு உதவி செய்து வருகிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
மாஸ்டர் ரிலீஸ் ஒடிடியிலா அல்லது திரையரங்குகளிலா என்ற கேள்விக்கு,
“மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. தியேட்டர்கள் திறக்கப்படும்போது ரிலீஸ் டேட் என்பது தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும். மாஸ்டர் என்னைக்கு ரிலீஸ் ஆகியிருந்தாலும் நல்லா வந்திருக்கும். கோவிட் சூழல் இருப்பதால் சினிமா துறையினர் மட்டுமல்ல எல்லோரும் கஷ்டத்தில் இருக்கிறோம். இப்பொழுதுதான் கமலஹாசனுடன் புது படம் ஆரம்பித்திருக்கிறோம். வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது. மாஸ்டர் முடிந்த பிறகு அதை பற்றி சொல்கிறேன்” என்றார்.