Skip to main content

தண்ணீருக்காக காவடி எடுத்து நூதன போராட்டம் நடத்திய மக்கள் !

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

குடிநீரின்றி தவிக்கும் உலகம்பட்டி மக்கள் தண்ணீர் காவடி எடுத்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அருகே உள்ள அகரம் பேரூராட்சி க்கு உட்பட்ட உலகம்பட்டி பிரிவு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்கிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதிமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை தொடர்ந்தது.

dindugal water protest

 

அதிருப்தி அடைந்த மக்கள் அகரம் பேரூராட்சியைக் கண்டித்து வாலிபர் சங்கம் மூலமாக திங்களன்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனுக்கொடுக்க தண்ணீர் காவடி தூக்கி வந்தனர். காலிக்குடங்களில் ரூபாய் நோட்டுக்களை கட்டியும், குச்சிகளில் குடங்களை கட்டி காவடி போலவும் நூதனமாக போராட்டம் நடத்தி மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர். 

இந்த போராட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் நிருபன்பாசு தலைமை வகித்தார் மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்த்தன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கார்த்திக், கிளைத்தலைவர் தங்கமாரியம்மாள், செயலாளர் மோகன், உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்